தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடி பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கல்வி துறையின் முதன்மை செயலராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை தற்காலிக முதன்மை செயலராக நியமனம் செய்து தலைமை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேசமயம் உதய சந்திரன் மாற்றப்படவில்லை. முதன்மை செயலரின் கீழ் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சம்பத் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக ரோகிணி ஆர்.பாஜிபாக்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ராஜேஷ் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, தொழில் வர்த்தக துறையின் கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த மலர்விழி மாற்றம் செய்யப்பட்டு, சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக ஜி.லதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com