சேலம் மாவட்டம், ஏற்காட்டின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதூர்த்தியை ஒட்டி 25 விநாயகர் சிலைகள் காவல் துறை அனுமதியுடன் வைக்கப்பட்டுள்ளது.
பூஜை துவங்கும் வரை விநாயகர் சிலையின் கண் பகுதி வெள்ளை துணியால் கட்டப்பட்டிருந்தது. நேற்று மாலை விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்யப்பட்டு கண் திறக்கும் நிகழ்வு நடைப்பெற்றது. பக்தர்கள் கலந்துக்கொண்டு விநாயகரை வணங்கினர்.
-நவீன்குமார்.