விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு, ஏற்காட்டின் பல்வேறு பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்த விநாயகர் சிலைகள் இன்று (27.08.2017) ஏற்காடு படகு இல்ல ஏரிக்கு கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டன.
காலை முதலே கொண்டு வரப்பட்ட சிலைகளை, கரையில் இருந்து படகு இல்ல ஊழியர்கள் தங்கள் படகில் கொண்டு சென்று ஏரியில் கரைத்தனர். இன்று மாலை 6:30 மணி வரை சிலைகள் கரைக்கும் நிகழ்வுகள் நடைப்பெற்றது. இன்று முழுவதும் அங்கு ஏற்காடு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் இருவர் மட்டும் வந்திருந்தனர். ஆனால், சிலைகளை கரைக்க உதவிகள் ஏதும் செய்யவில்லை. தங்களது வாகனத்திலேயே அமர்ந்திருந்தனர்.
-நவீன் குமார்.