இலங்கை அம்பாந்தோட்டை கடற்பரப்பில் 165 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவருக்கு, 26 ஆகஸ்ட் 2017 அன்று இரவு திடீர் என்று கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது.
இது சம்மந்தமாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தகவலின்படி, இலங்கை கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனடியாக மருத்துவ சிகிச்சையளிப்பதற்காக அந்த நபரை காலி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக காலி, கராபிட்டிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
-என். வசந்த ராகவன்.