மகாராஷ்ட்ரா மாநிலம், அவுரங்கபாத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி முகாம் ஆகஸ்ட் 25-ந் தேதி தொடங்கியது. இப்பயிற்சி முகாம் செப்டம்பர் 03- ந் தேதி வரை நடைபெறும். இப்பயிற்சி முகாமில் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் பயிலும் பதினொறாம் வகுப்பு மாணவன் பாலாஜி, 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஆசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிக்காக தமிழக அணியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இப்பயிற்சி முகாமிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இந்திய அணியின் சார்பில் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-மு.ராமராஜ்.