டி.கல்பனா நாயக்– ஐ.ஜி.யான இவர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். இவர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகேந்திர குமார் ரத்தோடு– டி.ஐ.ஜியான இவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். இவர் தொழில் நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அருண் பாலகோபாலன்– நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், பதவி உயர்வு பெற்று மதுரை நகர போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
என்.ஸ்டீபன் ஜேசுபாதம்– விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. பிரிவில் கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. விசேஷ புலனாய்வு பிரிவு சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.
பி.தங்கத்துரை– கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.ராமகிருஷ்ணன்– சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றிய இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
எம்.துரை– இவர் கோவை நகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றினார். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
ஜி.தர்மராஜன்– கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர் கோவை நகர தலைமையக துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெ.மகேஷ்– காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர் மதுரை நகர தலைமையக துணை போலீஸ் கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
ஏ.மயில்வாகணன்– மதுரை நகர தலைமையக துணை கமிஷனராக பணியாற்றிய இவர், திருச்சி நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக உள்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் நிரஞ்சன்மார்டி பிறப்பித்துள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com