அரசு உண்டு உறைவிட பள்ளிகளில் தேசிய மனித உரிமை ஆணைய சிறப்புப் பதிவாளர் ஜேக்கப் பூனூஸ் ஆய்வு!

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளிகளில் தேசிய மனித உரிமை ஆணைய சிறப்புப் பதிவாளர் ஜேக்கப் பூனூஸ் தலைமையில், துணை ஆட்சியர் சரவணகுமார், ஏற்காடு வட்டாட்சியர் சுமதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பள்ளி மாணவர்களிடையே, ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்தும், உணவுகள் வழங்கப்படுவது குறித்தும் விசாரித்தார். மேலும், பள்ளி அருகில் வசிக்கும் மக்களிடம் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மோசமான நிலையில் உள்ள கட்டிடங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளை செய்வதாக உறுதி அளித்தார்.

-நவீன்குமார்.