இலங்கை சிறையில் இருந்து 80 இந்திய மீனவர்கள் விடுதலை!-இந்திய கடலோர காவல் படையினரிடம், இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.

indian fisher man8indian fisher man1indian fisher man6indian fisher man2indian fisher man3indian fisher man7indian fisher man4indian fisher man5

இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன் பிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் காவலில் வைக்கப்பட்ட 76 இந்திய மீனவர்கள் மற்றும் கடந்த ஆகஸ்ட் 31- ம் தேதி கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 4 இந்திய மீனவர்கள் உள்பட மொத்தம் 80 இந்திய மீனவர்கள் இன்று (04 செப்டம்பர் 2017) இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட அனைவரையும், சர்வதேச கடல் எல்லைப் பகுதியில், இந்திய கடலோர காவல் படையினரிடம், இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.