திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் உள்ள மொத்த வியாபாரக் கடைகள் கள்ளிக்குடி வணிக வளாகத்திற்கு மாற்றம்!

TGM-CMd1 copy

brŒÂ btëpL1

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, மணிகண்டம் ஒன்றியம், கள்ளிக்குடி வணிக வளாகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் 05.09.2017 அன்று திறந்து வைத்தார்.

திருச்சிராப்பள்ளி நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டில் தற்போது சுமார் 6 ஏக்கர் பரப்பளவில்  காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் இதர பொருட்களுக்கான மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் மூலம் நடைபெற்று வருகிறது

TGM MANI GUNDU TGM 1TGM

TGM ARCHநாள் ஒன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் காந்தி மார்கெட் பகுதியில் வர்த்தகத்திற்காக வந்து செல்வதால், மிகுந்த போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறதுமேலும், காந்தி மார்க்கெட்டில் உருவாகும் அதிக அளவிலான குப்பைகளை கையாளுவதிலும் மாநகராட்சிக்கு மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்படுவதால், பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய இடையூறுகளுக்கு தீர்வாக ஸ்ரீரங்கம் வட்டம், கள்ளிக்குடி கிராமத்தில் காய்கறி மற்றும் பூக்களுக்கான மத்திய வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிக அளவிலான குப்பைகளால் பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வாக 9.79 ஏக்கர் பரப்பளவில் ரூ.65 கோடி செலவில் நகரின் மையப் பகுதியிலிருந்து  12 கி.மீ. தொலைவில் மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

மத்திய வணிக வளாகத்தில் தரைதளம் மற்றும் முதல் தளம் கொண்ட 19 பிளாக்குகளில் தலா 100 சதுர அடியில் 736 கடைகள், 150 சதுர அடியில் 264 கடைகள் என மொத்தம் 1000 கடைகள் உள்ளன. 2 ஆயிரம் மெட்ரிக் டன் குளிர்பதனக் கிடங்கு, வங்கி, 2 தரம் பிரிப்பு கூடங்கள், மாடிக்கு பொருட்களை கொண்டு செல்ல லிப்ட்டுகள் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன.

இவ்வளாகத்தினை பயன்படுத்திட கூடுதலான வசதிகள் தேவைப்படும் நிலையில் அவைகளும் செய்து தரப்படும். கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை களைய முதற்கட்டமாக காந்தி மார்க்கெட்டில் உள்ள மொத்த வியாபாரத்தினை புதிதாக கட்டப்பட்டுள்ள கள்ளிக்குடி வணிக வளாகத்திற்கு மாற்றிட மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரூ.65 கோடி திட்ட மதிப்பில் கட்டப்பட்டுள்ள கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தினை, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் 05.9.2017 அன்று திறந்து வைத்தார்.

இதன் மூலம் திருச்சிராப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிக அளிவில் பயன் பெறுவர்.

-கே.பி.சுகுமார்.
-எஸ்.ஆனந்தன்.