திருச்சி அங்காளம்மன் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல்தொடர்பு (ECE) மாணவர் பேரவை துவக்க விழா!

DSC_0065

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகில் உள்ள அங்காளம்மன் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில மின்னணு மற்றும் தகவல்தொடர்பு (ECE) மாணவர் பேரவை துவக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மாணவர் பேரவை செயலாளர் அனிதா வரவேற்றார். மாணவர் பேரவை இணைசெயலாளர் கவிதா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.

கல்லூரி டீன் முனைவர் சைவராஜ், மின்னணு மற்றும் தகவல்தொடர்பு துறை தலைவர் வினாயகமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எம்.ஏ.எம். பள்ளி இயக்குநர் முனைவர் சுப்புரெத்தினபாரதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

விழாவில் துறைத்தலைவர்கள் சியாமளா, பிரசாந்த், சண்முகபிரியன், ரவிராஜ், ஒருங்கிணைப்பாளர் சத்தியபாமா, பேராசிரியர்கள் ஜெயக்குமார் சாமுவேல், தாமோதரன் உள்பட பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். உதவி பேராசிரியர் மதுரவேணி, மாணவிகள் இளவரசி, அனுசுயா, கவிதா, மெர்லின், ஐஸ்வர்யா, சங்கீதா, யோகேஸ்வரி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

இறுதியாக மாணவர் பேரவை துணை செயலாளர் ராஜபிரசாந்த் நன்றி கூறினார்.

-எஸ்.ஆனந்தன்.