இலங்கையில் 272 கிலோ எடையுள்ள சுறா மீன்கள் பறிமுதல்!

sln2slnsln1

மீன்வளச் சட்டத்தின் படி சுறா மீன்கள் அழிந்துபோகக்கூடிய உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சுறா மீன்களை உணவுக்காகவோ, பொழுதுப்போக்கிற்காகவோ அல்லது விளையாட்டாகவோ, பிடிப்பது, சேமித்து வைப்பது, விற்பனை அல்லது ஏற்றுமதி செய்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை கடலோர காவல்படை மற்றும் மீன்வளத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நீர்கொழும்பு மீன் சந்தை வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 272 கிலோ எடையுள்ள சுறா மீன்களை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது சம்மந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் நீர்கொழும்பு மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

-என்.வசந்த ராகவன்.