ரியான் சர்வதேச பள்ளி மாணவன் கொலை சம்பவம்! -செய்தி சேகரிக்க சென்ற ஏ.என்.ஐ. (ANI) செய்தியாளர்கள் மீது ஹரியானா போலீசார் தடியடி!

RYAN INTERNATIONAL SCHOOL IN GURUGRAM

பிரதியுமான்.

பிரதியுமான்.

ஹரியானா மாநிலம், கூர்கான் மாவட்டத்தில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில், 2-ம் வகுப்பு படித்த பிரதியுமான் என்ற 7 வயது சிறுவன், 08.09.2017  அன்று அந்த பள்ளி கழிப்பறையில் மர்மமான முறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். சிறுவனை பாலியல் தொந்தரவு செய்து கொன்றதாக பள்ளி பேருந்து நடத்துனர் அசோக் குமார் என்பவனை, ஹரியானா போலீசார் கைது செய்துள்ளனர்.

Bus Conductor Ashok Kumar.1

பள்ளி பேருந்து நடத்துனர் அசோக் குமார்.

பள்ளி பேருந்து நடத்துனர் அசோக் குமார்.

சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பெற்றோர், உறவினர்கள் மற்றும் இதர மாணவர்களின் பெற்றோரும் பள்ளி வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

RYAN INTERNATIONAL SCHOOL AREA

பள்ளி ஆசிரியர்கள், முதல்வர் உள்ளிட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பெற்றோர்களிடம் லட்சக்கணக்கில் நன்கொடை வசூலிக்கும் ரியான் சர்வதேச பள்ளி நிர்வாகம், மாணவர்களை பாதுகாக்க தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

ANI personnel attacked by Haryana police1ANI personnel attacked by Haryana police4ANI personnel attacked by Haryana policeANI personnel attacked by Haryana police3ANI personnel attacked by Haryana police2

இந்நிலையில், இன்று அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஏ.என்.ஐ. (ANI- Asian News International) செய்தியாளர்கள் மீதும், அவர்கள் பயணம் செய்த  வாகனம் மீதும் போலீசார் தடியடி நடத்தினர். இத்தாக்குதலில் ஏ.என்.ஐ. செய்தியாளர்கள் வினோத் குமார், நவீன் யாதவ் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் பயணம் செய்த கார் கண்ணாடிகள் பலத்த சேதமடைந்துள்ளது.

இச்சம்பவத்திற்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com