ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு பெல் மகளிர் மன்றம் சார்பில் ஆசிரியர்களுக்கு பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது. அனைவரையும் சங்க செயலாளர் சாந்தி வரவேற்றார்.
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஆண்டு தோறும் ஆசிரியர் தினமாக இந்திய முழுவதும் கொண்டாடுவது வழக்கம். அதன் ஒருப் பகுதியாக திருச்சி, திருவெறும்பூர் பெல் மகளிர் மன்றம் சார்பில் பெல் மனமகிழ் மன்றத்தில் வளையல் சேகரித்தல், இசைபந்து, மற்றும் பேஷன் ஷோ ஆகிய போட்டிகள் நடைப்பெற்றது.
இந்த விழாவில் பெல் வளாகத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த பெண் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் வளையல் சேகரித்தல் போட்டியில் முதலாவது இடத்தை சண்முகவதி, இரண்டாமிடத்தை அருள்ஜோதி, மூன்றாமிடத்தை தனலெட்சுமி ஆகியோர் பெற்றனர்.
இசைபந்து போட்டியில் துர்க்கா பிரசன்னா, முதலிடத்தையும், நித்யா இரண்டாமிடத்தையும், லதா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
பேஷன் ஷோ போட்டியில் துர்க்கா பிரசன்னா முதலிடத்தையும், இரண்டாமிடத்தை ஜெயந்தியும், மூன்றாமிடத்தை ருக்மணியும் பெற்றனர். பேஷன் ஷோ நடுவராக நேட்சுரல் அழகு கலை அலுவலர் பிரதீபா செயல்பட்டார்.
இந்த விழாவில் சங்க இணைச்செயலாளர் திலகவதி, பெல் வளாகத்தில் உள்ள பள்ளிகளின் பெண் ஆசிரியர்கள் மற்றும் மகளிர் மன்ற நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
-ஆர்.சிராசுதீன்.