திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், துவாக்குடி வ.உ.சி. நகர் முதல் அண்ணா வளைவு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி திருவெறும்பூர் வட்டாட்சியர் ஷோபா தலைமையில் இன்று (14.09.2017) காலை முதல் நடைப்பெற்று வருகிறது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது நீதிமன்ற உத்தரவு இதை நாங்கள் நிறைவேற்றியே தீருவோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கு 100-க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். வருவாய் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.
-ஆர்.சிராசுதீன்.