பேரறிஞர் அண்ணா 109-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா சாலையிலுள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று (15.09.2017) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
-கே.பி.சுகுமார்.