கால்பந்து விளையாட்டில் “தங்கப் பந்து” விருதினை முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவன் வென்றார்.

football

ஆடம் J.L. டேவிட்.

சமீபத்தில் Y.M.C.A.  கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற, 31-வது ஆண்டு கோல்ஸ் கால்பந்து  விளையாட்டுப்போட்டியில், முகப்பேர் வேலம்மாள் பள்ளி பங்கேற்று விளையாடியது.

இவ்விளையாட்டுப் போட்டியில் பத்து வயதிற்குட்பட்டோர் பிரிவில் விளையாடிய வேலம்மாள் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன்  ஆடம் J.L. டேவிட், சிறப்பாக விளையாடி 30 கோல்கள் அடித்து சிறந்த வீரருக்கான “தங்கப் பந்து” (GOLDEN BALL) விருதினை வென்றார். மேலும், இந்தக் கால்பந்தாட்டப் போட்டியில் தொடர் நாயகன் விருதினையும் அவர் பெற்றுள்ளார்.

-மு.ராமராஜ்.