மருத்துவமனை ஊழியரை தாக்கிய துவாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் நாகவள்ளி ஆயுதப்படைக்கு மாற்றம்!

S3800002S3800004

திருச்சி, துவாக்குடியில் திருவெறும்பூர் தாலூக்கா அரசு மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையில் வரகனேரியை சேர்ந்த செல்வகுமார் (27) என்பவர் துப்புறவு பணியாளராக வேலைப்பார்த்து வருகிறார்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு புற நோயளிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கும் ஊழியர் வராததால், நேற்று  செல்வகுமார் அனுமதி சீட்டு வழங்கி கொண்டிருந்தார்.

அப்போது வாழவந்தான் கோட்டை முல்லைவாசல் பகுதியை சேர்ந்த விஜயலெட்சுமி தனக்கும், தனது மகளுக்கும் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவ அனுமதி சீட்டு கேட்டுள்ளனர். அதற்கு விஜயலெட்சுமி கொடுத்த நோட்டை வாங்கி கொண்டு செல்வகுமார் விஜயலெட்சுமி மகள் பெயரில் மட்டு அனுமதி சீட்டு கொடுத்ததாகவும், விஜயலெட்சுமி பெயரில் அனுமதி சீட்டு கொடுக்கவில்லை என்றும், இதுக்குறித்து கேட்டப்போது விஜயலெட்சுமிக்கும் செல்வகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து விஜயலெட்சுமி இதுக்குறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும், அதன் அடிப்படையில் செல்வகுமாரை அழைத்து சென்றதாகவும், அப்போது செல்வகுமாருடன்  இரண்டு பெண் ஊழியர்கள் போனதாகவும், அப்போது சப்இன்ஸ்பெக்டர் நாகவள்ளி செல்வகுமரை தாக்கியதாகும், இதில் செல்வகுமார் காதில் ரத்தம் வந்ததாகும், பின்னர் மருத்துவமனை ஊழியர்களை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், செல்வகுமார் துவாக்குடி அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்று, மேற்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்ட்டதாகும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவமனை ஊழியரை தாக்கியதோடு, தரக்குறைவாக பேசிய சப்இன்ஸ்பெக்டர் நாகவள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, துவாக்குடி மருத்துவரும் & மருத்துவ சங்க செயற்குழு உறுப்பினருமான சரவணன் தலைமையில், துவாக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்களும், ஊழியர்களும் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில், செல்வகுமரை தாக்கிய, துவாக்குடி சப்இன்ஸ்பெக்டர் நாகவள்ளி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

-ஆர்.சிராசுதீன்.