சசிகலா கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளனெக்ளஸ் குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கிளனெக்ளஸ் குளோபல் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிளனெக்ளஸ் குளோபல் மருத்துவமனை நிர்வாகம்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த 9 மாதங்களாக கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்னைகளுக்காக நடராஜன் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் கல்லீரலில் ஏற்பட்டுள்ள மோசமான பிரச்சினையால், கல்லீரல் இன்டன்சிவ் கேர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் பாதிப்பும் அவருக்கு உள்ளதால், நடராஜன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தற்போது அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்படவில்லை.
கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவர் காத்திருக்கிறார். நடராஜன் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் நடராஜனின் உடல்நிலை குறித்து அறிந்துள்ளனர்.
மருத்துவர் முகமது ரெலா தலைமையிலான மருத்துவர் குழு நடராஜனுக்கு சிகிச்சையளித்து வருகிறது. இவ்வாறு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லீரல் பிரிவின் இயக்குநர் மருத்துவர் இளங்குமரன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், விரிவான தகவலுக்கு கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்:
http://www.ullatchithagaval.com/?p=25633
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
சசிகலா கணவர் நடராஜன் கவலைக்கிடம்!
News
September 25, 2017 8:53 pm