இந்திய பிரதமர் நரேந்திர மோதியை, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் இன்று (26.09.2017) சந்தித்து பேசினார்.
அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதில் பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியில் மேம்பட்ட ஒத்துழைப்பை அவர்கள் இருவரும் விவாதித்தனர்.
அதேபோல், இந்தியா மற்றும் பிரான்சுக்கு இடையேயான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வளர்ப்பது குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த MEDEF (Mouvement des Entreprises de France) அமைப்பின் தலைவர் பியர்ரே கத்தாஸ் இன்று (26.09.2017) சந்தித்து பேசினார்.
பிரான்சு நிறுவனங்களை மேம்படுத்துதல், வணிக காலநிலை மற்றும் இந்தியாவில் வளர்ந்து வரும் முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அவரிடம் குறிப்பிட்டார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com