தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஷித் நியமனம்: இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு.

Banwarilal Purohit1

பன்வாரிலால் புரோஹித்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஷித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மேகாலயா பொறுப்பு ஆளுநராக இருந்து வருகிறார். தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்து வரும் வித்யாசாகர் ராவிற்கு பதிலாக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.

The President of India1

இதே போன்று, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு புதிய துணைநிலை ஆளுநராக தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர மேகாலயா ஆளுநராக கங்கா பிரசாத், அசாம் ஆளுநராக ஜெகதீஷ் முகி, அருணாச்சல பிரதேச ஆளுநராக பி.டி.மிஸ்ரா, பீஹார் ஆளுநராக சத்யபால் மாலிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை பிறப்பித்துள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com