ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தில் தமிழ் ஈழம் மலர்வதற்காக குரல் கொடுத்து, தமிழகம் திரும்பிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகம் வரும் வழியில் அபுதாபியில், அபுதாபி தமிழ் சங்கம் சார்பில் வைகோவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் சுதாகர் கண்ணன், ஸ்டாலின் பீட்டர்பாபு, வில்லிசேரி பாலமுருகன். ஜோஸ், துரை, சேவியர், சாமிராஜ் ஓமன் மைக்கேல், சையது அகமது, இளஞ்சூரியன், கருப்பசாமி, ரஹமதுல்லா, தேவராஜ், சிவப்பிரகாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
அதேபோல், சென்னை விமான நிலையம் முதல் ம.தி.மு.க. தலைமை அலுவலகம் தாயகம் வரை, தொண்டர்கள் வைகோவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-என்.வசந்த ராகவன்.