திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டூர் மஞ்சல் திடல் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இன்று காலை 7 மணியளவில் ரயிலில் அடிப்பட்டு பலியானார்.
அவர் கீழகல்கண்டார்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் கிரமத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் மணிகண்டன் என்றும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்களிடம் தகறாறு செய்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறியவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ரயிலில் அடிப்பட்ட நிலையில் தண்டாவாளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதுக்குறித்து ரயில்வே போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-ஆர்.சிராசுதீன்.