ஈரானில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் எரிவாயு வணிகக் கப்பலில், துருக்கி நாட்டை சேர்ந்த 24 வயதுடைய டெலில் ஆர்ஸன் என்ற நபர், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 20 கடல் மைல் தூரத்தில் கப்பல் இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த போது இத்துயர சம்பவம் நடந்துள்ளது.
தகவல் அறிந்த இலங்கை கடற்படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கப்பலில் இருந்து உடலை கைப்பற்றி, அம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், இறந்த உடலை அவரது சொந்த நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு, இலங்கை கடற்படையினர் அனைத்து உதவிகளையும் செய்தனர்.
-என்.வசந்த ராகவன்.