திருச்சி, திருவெறும்பூர் பெல் (BHEL) நிறுவன ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 15 ஆயிரம் பேருக்கு தொ.மு.ச சார்பில் டெங்கு காய்ச்சலில் இருந்து காப்பாற்றி கொள்ளும் வகையில் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த முடியால் தமிழக அரசும் திணறி வருகிறது.
இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பொது மக்கள் டெங்கு காய்ச்சலில் இருந்து காத்து கொள்ளும் வகையில், தமிழக அரசு உத்தரவின் பேரில், இந்திய மருத்துவத்துறை மற்றும் மாவட்ட சித்த மருத்துவதுறை சார்பில் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி, திருவெறும்பூர் பெல் நிறுவன ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் டெங்கு காயச்சலில் இருந்து காத்து கொள்வதற்காக இந்திய மருத்துவதுறை மற்றும் மாவட்ட சித்த மருத்துவ துறைகள் உதவியுடன் பெல் தொ.மு.ச தொழிற்சங்கம் சார்பில் பெல் தொழிற்சாலையின் அனைத்து நுளைவாயில்கள் மற்றும் பெல் குடியிருப்பு பகுதிகளில் நேற்று முதல் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை பெல் (BHEL) மெயின் கேட்டில் தொழிலாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
பெல் தொ.மு.ச தொழிற்சங்க பொதுச்செயலாளர் எத்திராஜ் தலைமை வகித்தார், துணைதலைவர் தீபன் முன்னிலை வகித்தார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிலவேம்பு கசாயம் வழங்கும் சேவையை தொடங்கி வைத்தார்.
-ஆர்.சிராசுதீன்.