ஆளுநரின் மாற்றத்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழல வாய்ப்பில்லை!

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????டில்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று (09.10.2017) சந்தித்து பேசினார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும், தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

new governor -tncmeps

ஆளுநரின் மாற்றத்தால் இப்போதைக்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழல வாய்ப்பில்லை.

மத்திய அரசிற்கும், பிரதமர் நரேந்திர மோதிக்கும் கே.பழனிச்சாமி இணக்கமாக இருக்கும் வரை, தமிழ்நாட்டில் முதல்வர் மாற்றமோ, ஆட்சி கலைப்போ நடைபெற வாய்ப்பே இல்லை.

ஆனால், தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, சிறப்பாக செயல்படாத மற்றும் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வரும் ஒரு சில அமைச்சர்களின் பதவியை பறிக்க வேண்டிய அவசியம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

அமைச்சர்களின் பதவியை பறிப்பதால், எடப்பாடி கே.பழனிச்சாமியின் அரசியல் செல்வாக்கு உயருமே தவிர, அவரது ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

பதவி பறிக்கப்பட்டவர்கள் அணி மாறிவிடுவார்களோ? (அல்லது) கட்சியை விட்டு போய்விடுவார்களோ என்று அச்சப்பட தேவையில்லை.

ஏனென்றால், நாங்கள் விசாரித்த வரை, எம்.எல்.ஏ. பதவியை இழப்பதற்கும் (அல்லது) மறுபடியும் ஒரு சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கும், தமிழகத்தில் உள்ள எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் தயாராக இல்லை.

விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை தவிர, பெரும்பாலான தி.மு.க., காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் விருப்பமும் இதுவாகதான் உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினர்களே இல்லாத உதிரி கட்சிகள்தான், தமிழக அரசை உடனடியாக கலைக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, தமிழக மக்களை பொறுத்தவரை, தம்மை யார் ஆளவேண்டும் என்பதைவிட, யார் ஆளக்கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கிறார்கள். 

ஆட்சி அதிகாரத்திலும், உயர் பதவிகளிலும் இருப்பவர்கள், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவும், சட்டத்திற்கும், தர்மத்திற்கும் ஏற்புடையவர்களாகவும், மக்களின் மனநிலையை பிரதிபளிக்கக் கூடியவர்களாகவும் அவசியம் இருக்க வேண்டும்.

அதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடமும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தற்போது எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com