திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிகளில் செடி, கொடி முளைத்து, புதர் மண்டி கிடந்தது. இதனால் கொசுக்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இப்போது எங்கு பார்த்தாலும் டெங்கு காச்சல் பயமுறுத்தி வருவதால், இதனால் சுதாரித்து கொண்ட காவலர் குடியிருப்புவாசிகள், அப்பகுதிகளில் இருந்த செடி, கொடி மற்றும் புதர்களை அழித்து துப்புரவு பணிகளை மேற்கொண்டனர்.
-ஆர்.சிராசுதீன்.