இலங்கையில் பல இடங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அதன்படி, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக 13 பேரும், கேராளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் டிராமாடோலின் மாத்திரைகள் வைத்திருந்ததாக வலாச்சனாய் பிரதேசத்தில் 2 பேரும், பாலுணர்ச்சியை தூண்டக் கூடிய மதனா மோடகா மாத்திரை வைத்திருந்ததாக 1 நபரும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கெரமுண்டலம் மற்றும் உச்சமுனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 82 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
-என்.வசந்த ராகவன்.