திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் சார்பில், நிலவேம்பு கசாயம் வழங்கும் சேவை நடைப்பெற்றது.

_MG_0042 _MG_0041 _MG_0048_MG_0035

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் சார்பில், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு டெங்கு” குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், டெங்கு காய்சலை தடுக்கும் பொருட்டும், நில வேம்பு கசாயம் வழங்கும் சேவை திருவெறும்பூரில் இன்று நடைப்பெற்றது.

இந்நிகழ்சிக்கு திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் தலைமை வகித்தார்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிலவேம்பு கசாயம் வழங்கியும், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் டெங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

-ஆர்.சிராசுதீன்.