திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் மகேஷின் சொந்த செலவில், குண்டூர் சந்தூரணி குளம் தூர் வாரும் பணி துவங்கியது.

_MG_0034 _MG_0014_MG_0029

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும், அவரவர் சொந்த தொகுதியில் உள்ள ஒரு குளத்தை சொந்த நிதியில் தூர்வாரி, மழை நீரை சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் வழி செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் மகேஷ், தனது திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் சந்தூரணி குளத்தை தனது சொந்த செலவில் தூர்வார முடிவு செய்தார்.

அதற்கான பூமி பூஜை மற்றும் தொடக்க விழா முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைப்பெற்றது.

 -ஆர்.சிராசுதீன்.