போதைப்பொருட்கள் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதை மற்றும் சட்ட விரோத மருந்துகள் அகற்றுவதற்கான தேசிய அளவில் கூட்டு முயற்சியினை மேற்கொண்டு வருகிறார்.
இருந்தாலும் கடல் மார்க்கமாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவது தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.
போதை மற்றும் சட்ட விரோத மருந்துகள் பறிமுதல் செய்யும் பணியில் இலங்கை கடற்படை தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் முதல் இன்று வரை வரை 299 கிலோ ஹெரோயின், 1,466.5 கிலோ கேரளா கஞ்சா மற்றும் மற்ற பகுதிகளில் இருந்து 3,219.7 கிலோ கஞ்சா, 118 பாக்கெட்டுகள் மடானா மோடகா பாலுணர்வு மாத்திரை, 33,286 போதை மாத்திரைகள், 8,660 சட்ட விரோத சிகரெட்டுகள், 128.45 கிலோ சட்ட விரோத புகையிலை பொருட்கள் மற்றும் 182 லிட்டர் சட்ட விரோத மதுபானம் ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இது சம்மந்தமாக 08 இந்தியர்கள் உட்பட, 193 நபர்களை கைது செய்துள்ளனர். பல வழக்குகளுக்கு எதிராக கடற்படையினர் விரைவான நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர்.
ஆனாலும், போதை மற்றும் சட்ட விரோத மருந்துகள் புழக்கம் இலங்கையில் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.
-என்.வசந்த ராகவன்.