கடலில் சிக்கி தவித்த 07 இந்தியர்களை, இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.

Sri Lanka Navy rescued Sri Lanka Navy rescued1 Sri Lanka Navy rescued2 Sri Lanka Navy rescued3 Sri Lanka Navy rescued4 Sri Lanka Navy rescued5

மாலத்தீவைச் சேர்ந்த இந்திய வணிக கப்பல் ஒன்று, இலங்கை தெற்கு கடற்படைத் தலைமையகத்திற்கு தெற்கே 68 கடல் மைல் தூரத்தில், இயந்திரக்கோளாறு காரணமாக கடலில் சிக்கியது. இதில் பணி புரிந்த 07 இந்தியர்கள் செய்வது அறியாது ஆபத்தில் சிக்கி தவித்தனர்.

இந்நிலையில், மாலத்தீவு அரசாங்கம், இலங்கை கடற்படையினருக்கு இன்று (21 அக்டோபர் 2017) அளித்த தகவலின் அடிப்படையில், கடலில் சிக்கி தவித்த 07 இந்தியர்களையும், இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டு, காலி துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளித்து, உணவு வழங்கி உபசரித்தனர்.

அதன் பின்னர், அந்த 07 இந்தியர்களையும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.