திருச்சி, திருவெறும்பூர் அருகே துப்பாக்கிதொழிற்சாலை ஊழியர் வீட்டில், 11 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் பணம் கொள்ளை!

20171022_134518

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், நவல்பட்டுகும்பக்குடி, எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் பஞ்சாபிகேஷன் (வயது 40), இவர் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர். இவர் நேற்று இரவு பணிக்கு சென்று விட்டார். இந்நிலையில், வீட்டில் அவரது மனைவி பத்மலெட்சுமி(வயது 35), மகன் ஸ்ரீவர்ஷன் (வயது17) ஆகியோர் மட்டும் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டின் கதவை கடப்பாரையால் நெம்பி, வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள், வீட்டில் இருந்த அறைகளை ஆராய்ந்துள்ளனர். சத்தம் கேட்ட எழுந்த ஸ்ரீவர்ஷன் கழுத்தில் அரிவாளையும், பத்மலெட்சுமி கழுத்தில் கடப்பாரையும் வைத்து மிரட்டியதோடு, பத்மலெட்சுமி கழுத்தில் இருந்த தாலி ஜெயின், வளையல்கள் மற்றும் பீரோவில் இருந்த நகை உட்பட மொத்தம் 11 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். ஆனால், கடப்பாரையை திருடர்கள் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இது சம்மந்தமாக பஞ்சாபிகேசன் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்ததின் அடிப்படையில், போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

மேலும், பக்கத்தில் குடியிருந்து வரும் மாதவராஜ்  மற்றும் ஹேமலதா ஆகியோரது வீட்டின் காம்பவுண்ட் கேட் பூட்டுகளையும் உடைத்த திருடர்கள் உள்ளே நுளைய முயன்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டதால் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர்.

-ஆர்.சிராசுதீன்.