பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மும்பை சென்ற குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
“தி எகனாமிக் டைம்ஸ்” விருது வழங்கும் விழாவில் எம்.வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு, பொருளாதார சிறப்பம்சத்திற்கான பொருளாதார டைம்ஸ் விருதுகளை வழங்கிய பின்னர் அவர் கூட்டத்தில் உரையாற்றினார்.
வேளாண்மை மற்றும் தொழிற்துறை நமது பொருளாதரத்தின் இரு கண்களாக பார்க்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடுவு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் மகாராஷ்டிராவின் ஆளுநர், சி.சி. வித்யாசாகர் ராவ், நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர், அருண் ஜேட்லி, ரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர், பியுஷ் கோயல், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ், மாநில அமைச்சர் சிவில் விமானப் போக்குவரத்துக்காக, ஜெயந்த் சின்ஹா மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
-எஸ்.சதிஸ் சர்மா.