இத்தாலி நாட்டு பிரதமர் பாலோ ஜென்டிலோனி, அரசு முறைப் பயணமாக இன்று டில்லி வந்தார். அவரை இந்திய பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார்.
இத்தாலி நாட்டு பிரதமர் பாலோ ஜென்டிலோனிக்கு இந்தியாவின் சார்பில் சிகப்பு கம்பள வரவேற்பும், ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
மகாத்மா காந்தி நினைவிடத்தில் இத்தாலி நாட்டு பிரதமர் பாலோ ஜென்டிலோனி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இத்தாலி நாட்டு பிரதமர் பாலோ ஜென்டிலோனியும், இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இருவர் முன்னிலையில் இரு நாடுகளுக்கிடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இரு நாடுகளுக்கு இடையிலான 70 ஆண்டுகால உறவை நினைவு கூறும் வகையில் அஞ்சல் தலை வெளியிட்டனர்.
பார்வையாளர்கள் புத்தகத்தில் இத்தாலி நாட்டு பிரதமர் பாலோ ஜென்டிலோனி கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு ஆகியோரை, இத்தாலி நாட்டு பிரதமர் பாலோ ஜென்டிலோனி தனித்தனியே சந்தித்து பேசினார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
இத்தாலி நாட்டு பிரதமர் பாலோ ஜென்டிலோனிக்கு, இந்தியாவில் சிறப்பான வரவேற்பு!
News
October 30, 2017 9:15 pm