கோவா கடல்சார் மாநாட்டை, இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவாவில் இன்று தொடங்கி வைத்தார். கோவாவில் உள்ள வடகோவா கடற்படைப் போர்க் கல்லூரியில், ஐஎன்எஸ் மண்டோவி கப்பலில் தாராங் ஆடிட்டோரியத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேஷியா, மாலத்தீவு, மலேசியா, மொரிஷியஸ், மியான்மர், செஷல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து நாடுகளின் கப்பற்படைகளின் தலைவர்கள், கடல்சார் முகமைகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
வளர்ந்து வரும் கடல் அச்சுறுத்தல்கள் மற்றும் படை கட்டமைப்பு, கடல்வழி விழிப்புணர்வு, கடல்சார் பாதுகாப்புக் கட்டமைப்பு மற்றும் இந்தியப் பெருங்கடலில் (IOR) கடல்சார் பாதுகாப்பு சவால்கள்… ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
-எஸ்.சதிஸ் சர்மா.
கோவா கடல்சார் மாநாட்டை, இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
News
November 1, 2017 8:39 pm