சென்னையில் மழையினால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் காவல் துறையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை சென்னை காவல் ஆணையாளர் விசுவநாதன் நேரில் பார்வையிட்டு, காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து, சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி, போக்குவரத்து சீராக செல்வதற்கு தேவையான ஏற்பாட்டை செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.
வெள்ள நீரை அகற்றி போக்குவரத்தை சரி செய்ய ஆயுதப்படை போலீசார் 100 பேர் அடங்கிய 10 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் தலா 10 போலீசார் உள்ளனர். இச்சிறப்பு குழுவினருக்கு மரம் அறுக்கும் இயந்திரம், தண்ணீர் அடைப்பை சரிசெய்ய உதவும் கருவிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு சென்று கால்வாய்களை சரிசெய்து அங்கு தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீராக செல்வதற்கு வேண்டிய பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பூட்டிருக்கும் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு, சென்னை மாநகரம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட, சென்னை காவல் ஆணையாளர் விசுவநாதன் உடனே உத்தரவிட வேண்டும்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
மீட்பு பணியில் காவல் துறை தீவிரம்!- வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை சென்னை காவல் ஆணையாளர் விசுவநாதன் பார்வையிட்டார்!
News
November 4, 2017 1:36 pm