இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு சட்ட விரோதமாக கடத்த முயன்ற 680.760 கிலோ கிராம் எடையுள்ள கடல் சங்கையும், அதை ஏற்றி வந்த வாகனத்தையும், மன்னாரில் உள்ள ஒத்துத்துவாவில், இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது சம்மந்தமாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள், கைப்பற்றப்பட்ட சங்கு மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் அனைத்தையும், சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண சுங்க அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
-என். வசந்த ராகவன்.