கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

BALA

கார்ட்டூனிஸ்ட் பாலா.

கந்துவட்டிக் கொடுமையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது குறித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி ஆகியோரை விமர்சித்து கேலிச் சித்திரம் (கார்ட்டூன்) வரைந்த “லைன்ஸ் மீடியா” என்ற ஊடகத்தின் கார்ட்டூனிஸ்ட் பாலா இன்று காலை சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி ஆகியோர் நிர்வாணமாக நின்று கொண்டு, ரூபாய் நோட்டுகளை மட்டும் வைத்து (கோவணமாக) ஆண் உறுப்பை பொத்தி கொண்டு, தீயில் எரியும் குழந்தையை  வேடிக்கை  பார்ப்பதை போல அந்த கேலிச் சித்திரம் (கார்ட்டூன்) வரையப்பட்டுள்ளது.

-கே.பி.சுகுமார்.