தினத்தந்தி பவள விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோதியை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை சபாநாயகர் மு.தம்பித்துரை, மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், தமிழக பாரதீய ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைப்பெற்ற விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்:
பிரிட்டிஷ் ஆட்சியில் பல பத்திரிகைகள் வெளிவந்து நாட்டின் சுதந்திரத்திற்கு காரணமாக இருந்தன. பிராந்திய மொழி பத்திரிகைகளை பார்த்து ஆங்கிலேயர்கள் அச்சம் கொண்டனர். சமூகத்தின் மனநிலையை சரியாக எடுத்துக் காட்டுபவை ஊடகங்களே. ஊடகங்கள் நம்பகத்தன்மையை எப்போதும் உறுதி செய்ய வேண்டும். தொழில் நுட்பம் ஊடகத்தில் பெரும் மாறுதல்களை கொண்டு வந்துள்ளது. ஊடகங்களின் கவனம் அரசை சுற்றியே உள்ளது, அதே கவனம் 125 கோடி மக்களை சுற்றியும் இருக்க வேண்டும்
கருத்து சுதந்திரத்தை பத்திரிகைகள் தவறாக பயன்படுத்துவது குற்றமாகும். மக்களின் உணர்வுகளை சமூகத்தின் கடைகோடி வரை கொண்டு செல்கிறது “தினத்தந்தி“75 ஆண்டுகால சாதனையை நிகழ்த்திக் காட்டிய தினத்தந்தி நிர்வாகம், ஊழியர்களுக்கு பாராட்டு.
எளிய முறையில் செய்திகளை புரியும் வண்ணம் கொடுப்பது தினத்தந்தியின் தனித்துவம். அஞ்சல் துறையால் நிர்வகிக்கப்பட்ட தந்தி கொடுக்கும் முறை காணாமல் போனது, ஆனால் 75 ஆண்டுகளை கடந்து செய்திகளை தந்தியாக தினத்தந்தி கொடுத்து வருகிறது. தமிழகம், பிறமாநிலங்கள், வெளிநாடு என 17 பதிப்புகளில் தினத்தந்தி வெளிவருவது மாபெரும் சாதனை. பெங்களூர், மும்பை என வெளி நகரங்களிலும் வெளியாகி சிறந்து விளங்குகிறது தினத்தந்தி. தினத்தந்தியின் வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 24 மணி நேரமும் செய்தி தொலைக்காட்சிகள் மக்களுக்கு கிடைத்து வருகிறது ஆனாலும் காலையில் தேநீருடன் பத்திரிகை படிப்பதை மக்கள் நிறுத்தவில்லை.
சென்னை மற்றும் தமிழகத்தில் பெய்தமழை குறித்து கேட்டறிந்தேன். மத்திய அரசு முழு உதவி செய்யும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உரையாற்றினார்.
9422PDIPR-P.R.No.749-Hon_bleCM-Speech-Hon_blePMfunction-Date6.11.17
-ஆர்.அருண்கேசவன்.
-சி.வேல்முருகன்.