மழை காலத்தில் மின் விபத்திலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்நாடு மின்சார வாரியம் ஒவ்வொரு மின்சார வாரிய அலுவலகப் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளிடம் இது குறித்து துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில், திருச்சி, திருவெறும்பூர் மின்சார வாரியம் சார்பில், முக்குளத்தோர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணவு முகாமிற்கு, திருவெறும்பூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சசிகுமார் தலைமை வகித்தார். உதவிபொறியாளர் விக்ரம் ராஜா மற்றும் மின்சார ஊழியர்கள் செல்வம், சுகுமார் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு முக்குளத்தோர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பள்ளி மைதானத்தில் மாணவ, மாணவிகளுக்கு மழை காலங்களில் மின்சாரத்தினால் ஏற்பட கூடிய விபத்துகள் பற்றியும், அதிலிருந்து பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்து கூறியதோடு, துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி, அவர்கள் தங்களது வீட்டின் அருகாமையில் உள்ளவர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் மின் விபத்துகள் குறித்தும், அதிலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும் எடுத்த கூறும்படி தெரிவித்தனர்.
இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
-ஆர்.சிராசுதீன்.