குடி நீரில் புழுக்கள் மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி!

S4270096S4270098S4270100S4270099திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட  64-வது வார்டு திருவெறும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள, பர்மா காலனி குடியிருப்பு பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இருக்கின்றன. பொதுமக்கள் பல வருடங்களாக இந்த பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை காவிரி குடிநீர் இணைப்பில் உள்ள பைப்புகளில் பெண்கள் குடத்தில் குடி தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது குடி தண்ணீரில் புழுக்கள் மிதந்து  வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், ஒரு வாரமாக சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதால், அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் இன்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்வார்களா?

-ஆர்.சிராசுதீன்.