தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் வேலம்மாள் பள்ளி மாணவனுக்கு 2-ம் பரிசு!

Kolor 6.11.17

க்ளொபல் ஆர்ட் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான ஓவியப் போட்டி நவம்பர் 5-ந்தேதி நடைபெற்றது. இந்தியாவின் ஏழு மாநிலங்களிருந்து 1,200 மாணவர்கள் பங்கு பெற்ற இந்த ஓவியப் போட்டியில், சிறப்பு விருந்தினராக நேஷனல் பேஷன் டெக்னாலஜி கல்லூரியின் இயக்குனர் அனிதா மனோகரன் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார். இவ் ஓவியப் போட்டியில் வேலம்மாள் ஆலப்பாக்கம் பள்ளியைச் சோர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் ஆதித்யா 2-ம் பரிசு பெற்றார்.

-மு.ராமராஜ்.