ஏற்காடு மலையை சேதப்படுத்தும் கனரக வாகனங்கள்…! -வேடிக்கைப் பார்க்கும் அதிகாரிகள்.

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியானது கடல் மட்டத்திலிருந்து 5,326 அடி உயரத்தில் உள்ளது. மலைப் பகுதிகளில் ஜே.சி.பி., ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்க கூடாது மற்றும் பாறைகளை வெடி வைத்து உடைக்க கூடாது என்ற விதிகள் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் ஏற்காடு காவல் நிலையம் அருகில் உள்ள அழகு நிலையம் எனும் மலை குன்றினை தனியார் ஹிட்டாச்சி வாகனத்தை கொண்டு சமன் செய்யப்பட்டு வந்தது.

மேலும், பாறைகளில் கம்பரசரால் குடைந்து, வெடி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதனால் ஏற்காடு ஒன்றியத்தை சேர்ந்த .தி.மு., தி.மு., தே.மு.தி., உள்ளிட்ட கட்சியினர் ஏற்காடு வட்டாட்சியரிடம் இது குறித்து மனு அளித்து, பின்னர் அப்பகுதிக்கு சென்று ஹிட்டாச்சி வாகனத்தை சிறைபிடித்தனர். அங்கு வந்த ஏற்காடு வட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறையினர் ஹிட்டாச்சி வாகன இயக்கத்தை நிறுத்தி, கட்சியினரிடம் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார்.

இது குறித்து ஏற்காடு வட்டாட்சியர் கூறியதாவது:

ஏற்காடு பகுதியில் ஹிட்டாச்சி உள்ளிட்ட வாகனங்களை இயக்ககூடாது என்ற விதிமுறைகள் தெரியாமல் அவர்கள் வாகனத்தை இயக்கியுள்ளனர். எனவே, அவர்களை எச்சரித்து, அனுப்பியுள்ளேன். ”

விதிகளை மீறி இயக்கப்பட்ட ஹிட்டாச்சி வாகனத்திற்கு தாசில்தார் அபராதம் கூட விதிக்காதது, கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

-நவீன் குமார்.