வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், வன்னிவேடு, தேவதானம், பாலாறு ஆற்று பகுதிகளில் மணல் கடத்தல் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வாலாஜா வட்டாட்சியர் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர், சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுப்பட்ட லாரி மற்றும் பதுக்கி வைக்கப்பட்ட மணல் ஆகியவற்றை நேற்று பறிமுதல் செய்தனர்.
-மு.ராமராஜ்.