திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள எழில்நகர், ரோஜா தெருவை சேர்ந்தவர் மெர்லின் தோமாஸ் (வயது 61), இவரது மகன் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார்.
இந்நிலையில், மெர்லின் தோமாஸ் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பெல் டவுன்ஷீப்பில் உள்ள மகள் செரின் வீட்டிற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்றவர் அங்கேயே தங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக மெர்லின் தோமாஸ் மருமகன் ஆனந்தனுக்கு, பக்கத்து வீட்டுக்காரர் தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் அங்கு வந்து பார்த்தப்போது வீட்டின் கதவு பூட்டு லாக்கு அறுக்கப்பட்டு, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் LED டிவி திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஆனந்தன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால், இதே வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
ஆனால், திருவெறும்பூர் போலீசார் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை.
-ஆர்.சிராசுதீன்.