திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை “மதுக்கான்” நிறுவனம் பராமரித்து வருகிறது. ஆனால், திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் மற்றும் திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதைகள் மற்றும் சர்வீஸ் சாலைகளை இதுவரை போடவில்லை.
இதனால் மழை காலங்களில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் மோசமாக இருப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அடிக்கடி விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். வாகனங்களும் அடிக்கடி பழுதாகி வருகிறது.
இந்நிலையில், அரியமங்கலம் மற்றும் திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை மற்றும் சர்வீஸ் சாலையை, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் இன்று நேரில் பார்வையிட்டார்.
சர்வீஸ் சாலை மற்றும் சுரங்கபாதை அமைப்பது குறித்து “மதுக்கான்” நிறுவன அதிகாரிகளை அழைத்து பேசியுள்ளேன். இந்த சாலைகளை போடுவதற்கு உரிய அனுமதியை பெற்று அதற்கு ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளனர்.
அந்தப்பணி எப்போது எவ்வளவு நாட்களில் முடிக்கப்படும் என்று கேட்டதற்கு, அதுகுறித்து தகவல் இல்லை. இரண்டொருநாளில் “மதுக்கான்” நிறுவன அதிகாரிகளை அழைத்து பேசி, மேம்பாலம் சர்வீஸ்சாலை மற்றும் சுரங்கப்பாதை சாலை போடும் பணி தொடங்கி விரைந்து முடிப்பது குறித்து பேச இருக்கிறேன்.
அவர்கள் அந்த பணியை விரைந்து செய்து முடிக்கவில்லை என்றால், பொதுமக்களை திரட்டி சுங்க சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன்.
இவ்வாறு திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் தெரிவித்தார்.
-ஆர்.சிராசுதீன்.
திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப்பாதை மற்றும் சர்வீஸ் சாலைகளை உடனே அமைக்காவிட்டால், மக்களை திரட்டி சுங்க சாவடியை முற்றுகையிடுவேன்: திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் தகவல்.
News
November 9, 2017 7:47 pm