திருச்சி, திருவெறும்பூர் பெல் (BHEL) நிறுவனத்தில் 1,200 நபர்கள், இன்ஜினீயர் சூப்பர்வைசராக வேலைப் பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு சாதாரண பெல் (BHEL) ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, சூப்பர்வைசர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவாக உள்ளது. இந்த பிரச்சனை கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் உள்ளது.
இந்நிலையில், உழைப்பிற்கும், தகுதிக்கும் ஏற்ற ஊதியம் வழங்காத பெல் (BHEL) நிர்வாகத்தை கண்டித்தும், பெல் சூப்பர்வைசர்களுக்கு ஊதியத்தை உடனே உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பெல் சூப்பர்வைசர் ஊழியர் சங்கம் சார்பில் இன்று காலை கண்டனப் பேரணி நடைப்பெற்றது.
பேரணி சங்க பொதுச்செயலாளர் முகமதுசெரிப், தலைவர் டேவிட் தலைமையில் கணேசபுரத்திலிருந்து தொடங்கி, பெல் (BHEL) மெயின் கேட் வரை நடைப்பெற்றது. இந்த பேரணியில் சுமார் 1000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
–ஆர்.சிராசுதீன்.