பிலிப்பைன்ஸ் நாட்டின் லாஸ் பனோஸ் பகுதியில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் The International Rice Research Institute (IRRI) செயல்பட்டு வருகிறது.
இந்த சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக அளவில் இந்திய விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்.
ஆசியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இன்று சென்றார்.
மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் தருணங்களில், 14 முதல் 18 நாட்கள் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருந்தாலும், எந்த சேதமும் ஏற்படாமல் நல்ல விளைச்சலை தரக்கூடிய நெல்வகைகள் பற்றி, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு, அங்குள்ள விஞ்ஞானிகள் எடுத்துரைத்தனர்.
மேலும், அங்குள்ள விளைநிலங்களையும், நெல் வயல்களையும், இந்திய பிரதமர் நரேந்திர மோதி சுற்றிப் பார்த்தார். அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் குழுவாக படம் எடுத்துக்கொண்டார்.
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிராந்திய மையத்தை வாரணாசியில் அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த தொகுதியில் அமையும் இந்த மையத்தில், அதிக விளைச்சல் தரும் நெல் வகைகளை உருவாக்குவது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 17 நாடுகளில் அலுவலகம் உள்ளது. 1960 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பசுமை புரட்சியின் பங்களிப்பாக இந்த மையம் செயலாற்றி வருகிறது.
-ஆர்.மார்ஷல்.
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் (IRRI), இந்திய பிரதமர் நரேந்திர மோதி! –படங்கள்.
News
November 13, 2017 2:58 pm