பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 128 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாட்டம் நடைப்பெற்று வருகிறது.
குழந்தைகளுக்கான தேசிய விருதினை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.
பண்டித ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் வண்ண மயமான பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
தமிழக அரசின் சார்பில் சென்னையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், பண்டித ஜவஹர்லால் நேரு திருஉருவப் படத்திற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பா.பெஞ்சமின், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் பண்டித ஜவஹர்லால் நேரு திருஉருவப் படத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.
-சி.வேல்முருகன்.