தமிழகத்தில் திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர காவல் துறை ஆணையராக இருக்கும் அமல்ராஜ், திருச்சி மாநகர காவல் துறை ஆணையராகவும், திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக இருக்கும் அருண், சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையராகவும், சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையராக இருக்கும் பெரியய்யா, கோவை மாநகர காவல் துறை ஆணையராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறை பொது விநியோக துறையில் ஐ.ஜி.,யாக இருக்கும் வெங்கட்ராமன் நிர்வாகதுறை ஐ.ஜி.,யாகவும், நிர்வாக பிரிவில் ஐ.ஜி.,யாக இருக்கும் தினகரன் ஸ்தாபன ஐ.ஜி.,யாகவும், சென்னை பயிற்சி கல்லூரி ஐ.ஜி.,யாக சோனல்மிஸ்ராவும், அமலாக்கத்துறை கண்காணிப்பாளராக அமானத்தும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக உள்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்!- உத்தரவின் உண்மை நகல்.
News
November 14, 2017 10:09 pm